12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் பரிசளித்து பாராட்டு

0 342
Stalin trichy visit

திருச்சியில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் பரிசு வழங்கி பாராட்டினார்..

திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட மதுரம் பள்ளி,இ.பி ரோடு ஹோசன் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி, அரசு சையது முர்துசா மேல்நிலைப்பள்ளி, டவுன்ஹால் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வில் முதல் ஐந்து இடங்களை பிடித்த 20 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, ஸ்கூல் பேக், வாட்ச், புத்ஆடைகள் வழங்கும் நிகழ்ச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற இனிகோ இருதயராஜ் ஏற்பாட்டில் திருச்சி மன்னார்புரத்தில் தனியார் ஒட்டலில் இன்று நடைபெற்றது.

இவ்விழா கலந்து கொண்ட இனிகோ இருதயராஜ் ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் பொருட்களை வழங்கி பாராட்டினார்..

அப்போது இனிகோ இருதயராஜ் பேசுகையில்…

வறுமையை ஒழித்து நாம் முன்னேற வேண்டும். வறுமையான குடும்பத்தில் இருந்து வந்தவன் நான். உங்களது சூழ்நிலையையும் நான் நன்கு அறிவேன்.

தற்போதுள்ள வெற்றியாளர்கள் ஏதேனும் ஒரு சூழ்நிலையில் வறுமையில் இருந்திருப்பார்கள். அந்த வெறி தான் அவர்களை போராடி வெற்றி பெற செய்திருக்கும். நாம் சாதிக்குப் பிறக்கவில்லை சாதிக்க பிறந்தவர்கள் என்றார்..

இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோருக்கு மதிய விருந்தளித்து அவர்களுடன் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் உணவு அருந்தினார்…

இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாநகர செயலாளரும், மண்டல குழுத்தலைவருமான மதிவாணன், மண்டல குழு தலைவர் ஜெயநிர்மலா,பகுதி செயலாளர் ஏ.எம்.ஜி.விஜயகுமார், தொழிலதிபர்கள் அலெக்ஸ் ராஜா,கண்ணப்பா ஹோட்டல் உரிமையாளர் கண்ணையா மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.