ரூபாய் 14.40 கோடி மதிப்பில்லான சாலை விரிவாக்கப் பணியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார்

0 291
Stalin trichy visit

திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் கிராமத்திலிருந்து பத்தாளப்பேட்டை வரை சாலை விரிவாக்கப் பணியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார். திருவெறும்பூரிலிருந்து கூத்தைப்பார் பத்தாளப்பேட்டை வழியே திருக்காட்டுப்பள்ளி தஞ்சை மாவட்டத்திற்கு நேரடியாக சாலை போக்குவரத்து வசதி உள்ளது.இவ்வழியே நாளொன்றுக்கு 500 க்கும் மேற்பட்ட டூ வீலர் முதல் பெரிய வாகனங்கள் வரை சென்று வரும் வழி ஓரங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த சாலையானது திருவெறும்பூரிலிருந்து கூத்தைப்பார் வரை அகலமானதாக இருக்கும் கூத்தைப்பார் இலிருந்து பத்தாளப்பேட்டை வரை 3.75 மீட்டர் அகலம் குறுகியதாக இருக்கும் இதனால் கடந்த காலங்களில் பத்தாளப்பேட்டை முடுக்குபட்டி செட்டியார் பேட்டை இப்பகுதியில் தொடர்ந்து விபத்துகளும் உயிர் பலிகளும் நடந்து வந்தது இதனால் இந்த சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டி முன்னாள் எம்.எல்.ஏ கே என் சேகரன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மக்கள் பிரதிநிதிகள் ஊராட்சி தலைவர்கள் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கோரிக்கை வைக்கவே அமைச்சரின் தீவிர முயற்சியால் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 14 கோடியே 40 லட்சம் திட்ட மதிப்பீட்டில் கூத்தைப்பார் பகுதியிலிருந்து பத்தாளப்பேட்டை வரை 7.2 கிலோ மீட்டர் நீளம் அகலம் 1.75 மீட்டர் அளவில் சாலை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு அதற்கான தொடக்க விழா இன்று நடைபெற்றது இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு கொடியசைத்து விரிவாக்கப் பணியை தொடங்கி வைத்தார் இதில் முன்னாள் எம்எல்ஏ கே என் சேகரன் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் கே எஸ் எம் கருணாநிதி,திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய சேர்மன் சத்யா கோவிந்தராஜ், கூத்தைப்பார் பேரூராட்சி தலைவர் செல்வராஜ், பத்தாளப்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் ரீனாஜவான், கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் ரம்யா, மற்றும் முன்னாள் பேரூர் கழக செயலாளர் சாமிக்கண்ணு கோபி ஐடி விங் வேலுச்சாமி விவசாய அணி அமைப்பாளர் வேலுச்சாமி விவசாய அணி அமைப்பாளர் சிவசக்தி நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி,கோட்ட பொறியாளர் கேசவன்,உதவி கோட்ட பொறியாளர் புகழேந்தி, உதவிப் பொறியாளர் அசோக்குமார்,திமுக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.