திருச்சியில் 200 பேருக்குஇலவச வீட்டுமனை பட்டா : அமைச்சர் கே.என் நேரு வழங்கினார்
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 25 வது வார்டு சீனிவாச நகர் உய்யக்கொண்டான் வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா வேண்டி அமைச்சர் கே என் நேரு விடம் கோரிக்கை வைத்திருந்தனர்.. இந்நிலையில் திருச்சி சீனிவாச நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வீட்டுமனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.. இந்த விழாவில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு கலந்துகொண்டு இலவச வீட்டு மனை பட்டா 200 பேருக்கு வழங்கி சிறப்பித்தார்…
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், பழனியாண்டி, மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்…