திருச்சியில் மூதாட்டியிடம் 15 பவுன் செயின் பறிப்பு – போலீஸ் வலை!

0 486
Stalin trichy visit

திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் சந்திரா(57). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். மூன்று பேரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில் சந்திரா நேற்று சங்கிலியாண்டபுரத்திலிருந்து மகன் சபரி வீட்டிற்கு சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு செல்ல மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் பைக்கில் வந்த 2 பேர் சந்திரா அணிந்திருந்த 15 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி விட்டனர்.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.