தென்னூர் நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்டத்தின் 17 ஆம் ஆண்டு விழா

0 294
Stalin trichy visit

 

திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்டத்தின் 17 ஆம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் விமலா தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சைதா பானு, திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலக நூலகர் புகழேந்தி, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். திருச்சி தென்னூர் நடுநிலைப் பள்ளியில் 2006 ஆம் ஆண்டு முதல் காலை உணவு திட்டம் சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது. காலை உணவில் இட்லி,வெண் பொங்கல், இனிப்பு பொங்கல், கிச்சடி, உப்புமா என ஆறு நாட்களும் அறுசுவை உணவுகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 17ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு சுவாமிநாதன் உணவுப்பொருட்களை நன்கொடையாக வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.