பள்ளி மாணவர்கள் தினம் ஒரு திருக்குறள் பொருளுடன் எழுதும் நிகழ்ச்சி
தினம் ஒரு திருக்குறள் பொருளுடன் எழுதும் நிகழ்ச்சி
திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளி, திருச்சி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை இணைந்து பள்ளி மாணவர்கள் கரும் பலகையில் தினம் ஒரு திருக் குறளினை பொருளுடன் எழுதும் நிகழ்வு துவங்கியது. பள்ளி தலைமை ஆசிரியர் விமலா தலைமை வகித்தார். திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார், நூலகர் புகழேந்தி, ஆசிரியர் பெருமக்கள் முன்னிலையில் மாணவர்கள் திருக்குறள் பொருளுடன் எழுதும் நிகழ்ச்சி துவங்கியது. பள்ளி தலைமை ஆசிரியர் விமலா பேசுகையில் தமிழ் மொழியின் ஒப்பற்ற சிறப்புகளில் ஒன்றான திருக்குறள் உலகப் பொதுமறையாக போற்றப்படுகிறது
தெய்வப்புலவர் என்று போற்றப்படும் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது திருக்குறள். இதில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒரு அதிகாரத்திற்கு பத்து குறள் வீதம் மொத்தம் 1330 திருக்குறள் உள்ளன. இவை அனைத்தும் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பிரிவுகளுக்குள் வருகின்றன. பள்ளியில் அறத்துப்பால் பொருட்பாலில் இடம் பெற்றிருக்கும் 108 அதிகாரங்களில் உள்ள குறள்களை மாணவர்களைக் கொண்டு கரும்பலகையில் எழுதும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். பள்ளியில் திருக்குறள் மன்றம் மூலம் திருக்குறளை கற்றறிந்து திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்று வருகின்றனர் மேலும் பள்ளி சுற்றுச்சுவரில் திருக்குறள் எழுதியுள்ளோம் பள்ளி முதல் தல வகுப்பறையில் கல்வி அதிகாரங்களில் இடம் பெற்றுள்ள திருக்குறளை எழுதியுள்ளோம் என்றார்.