2வது தவணையாக 2000 ரூபாய் – திருச்சியில் அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைப்பு !

0 771
Stalin trichy visit

திருச்சியில் தமிழக அரசு அறிவித்திருந்த இரண்டாவது தவணை ரூபாய் 2000 மற்றும் மளிகை தொகுப்புகள் வழங்கும் நிகழ்வை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார்.

 

தமிழக முதல்வராக பதவியேற்ற முக ஸ்டாலின் ரூபாய் 4000 ஆயிரம் கொரோனா‌ நிவாரண நிதி வழங்குவதாக அறிவிப்பை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் முதல் தவணையாக 2000 ரூபாய் தமிழக முழுவதும் உள்ள நியாய விலை கடைகள் மூலம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டாம் தவணையாக ரூபாய் 2000 இம்மாதம் 15ஆம் தேதி வழங்கப்பட்டு வரும் நிலையில் இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சிவராசு தலைமையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இரண்டாவது தவணையாக ரூபாய் 2000 வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து அதனுடன் 14 வகையான இலவச மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் பொதுமக்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி N. சிவா, பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், 

சட்டமன்ற உறுப்பினர்கள் லால்குடி சௌந்தரபாண்டியன், துறையூர் ஸ்டாலின் குமார், முசிறி காடுவெட்டி தியாகராஜன், ஸ்ரீரங்கம் பழனியாண்டி,

மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் அருளரசு ,மாவட்ட வழங்கல் அலுவலர் அன்பழகன், தமிழ்நாடு நுகர்பொருள்  வாணிபக் கழக மண்டல மேலாளர் சிற்றரசு, மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி,மாநகரச் செயலாளர் அன்பழகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.