பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணம் பறித்த 2 பேர் கைது

0 279
Stalin trichy visit

திருச்சி அக் 15- திருவரங்கம் அருணா நகரை சேர்ந்தவர் சுப்பு (வயது 67) இவர் திருச்சி இ.பி ரோடு பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 8ந் தேதி பெட்ரோல் பங்கிற்கு ஒரே வண்டியில் மூன்று பேர் பெட்ரோல் போட வந்துள்ளனர். பிறகு அவர்களுடைய இருசக்கர வாகனத்திற்கு பங்க் ஊழியர் சுப்பு பெட்ரோல் நிரப்பியுள்ளார். பிறகு பணம் கேட்டதற்கு மூன்று பேரும் தரமாட்டேன் என்று கூறி சுப்புவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் திடீரென்று ஆத்திரமடைந்த மூன்று பேரும் சேர்ந்து பெட்ரோல் பங்க் ஊழியரிடம் கத்தியை காட்டிய மிரட்டி அவரிடமிருந்து ரூ2,000 பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்.இந்த சம்பவம் குறித்து சுப்பு கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரிந்த மூன்று பேரைப் பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் தாராநல்லூர் பகுதியை சேர்ந்த சந்துரு (வயது 23) இபி ரோடு பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (வயது 23) காட்டூர் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் ஆகிய மூன்று பேர் என தெரிய வந்தது. இதையடுத்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சந்துரு,அஸ்வின் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய லோகநாதனை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.