இருசக்கர வாகனம் திருடிய 2 பேர் கைது

0 115
Stalin trichy visit

திருச்சி ஜூலை 24 திருச்சி சர்க்கார் பாளையம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் முடியப்பன். இவரது மகன் வில்லியம் அலெக்ஸாண்டர் (வயது 29). இவர் தனது இருசக்கர வாகனத்தை சத்திரம் பஸ் நிலையம் பொதுக்கழிப்பிடம் அருகில் நிறுத்திவிட்டு சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது தனது இருசக்கர வாகனத்தை காணவில்லை.

உடனே இது குறித்து வில்லியம் அலெக்சாண்டர் கோட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வாசு வழக்கு பதிந்து, இது தொடர்பாக எட்வர்டு ஆனந்த் மற்றும் 16 வயது சிறுவர் ஆகிய இருவரை கைது செய்தார். அவர்களிடமிருந்து இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.