கரும்பு ஜூஸ் பிழியும் மோட்டாரை திருடிச் சென்ற 2 பேர் கைது
திருச்சி, அக். 20 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அத்தானியில் உள்ள திருச்சி துறையூர் சாலையில் கரும்பு ஜூஸ் கடையில் இருந்த மோட்டாரை திருடிச் சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கேட், டி. களத்தூர், விநாயகம் தெருவை சேர்ந்தவர் 42 வயதான குமார்.இவர் தற்போது மண்ணச்சநல்லூர் அருகே அத்தாணி மேற்கு தெருவில் வசித்து வருகிறார்.இவர் அத்தாணி பகுதியில் சாலையோரம் கடந்த ஐந்து வருடமாக கரும்பு ஜூஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பணிகளை முடித்துவிட்டு கரும்பு ஜூஸ் பிழியும் இயந்திரத்தை தார்பாய் போட்டு மூடிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் மறுநாள் வந்து பார்க்கும்போது கரும்பு ஜூஸ் பிழியும் மோட்டார் திருட்டுப் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மண்ணச்சநல்லூர் காவல்நிலையத்தில் குமார் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் விசாரணை செய்து மோட்டாரை திருடிச் சென்ற நபர்களை தேடி வந்தனர். நேற்று நடைப்பெற்ற தீவிர தேடுதல் வேட்டையில் மோட்டாரை திருடிச் சென்ற சமயபுரம் நெசவாளர் காலனி பகுதி சேர்ந்த 34 வயதான விஜயா ஜரிதா, நாமக்கல் மாவட்டம் ஓலப்பாளையம் நவனிப்பள்ளிபட்டியைச் சேர்ந்த 35 வயதான கதிரவனைச் சச ஆகியோர் என தெரியவந்தது. பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த மண்ணச்சநல்லூர் போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.