ஹவுரா ரயிலில் கடத்தி வரப்பட்ட 2 கிலோ கஞ்சா பறிமுதல்

0 254
Stalin trichy visit

திருச்சி ரயில் நிலையத்தில் ஹவுரா ரயிலில் கடத்தி வரப்பட்ட 2 கிலோ கஞ்சா பறிமுதல்

தெற்கு ரயில்வேமுதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர்,  ஜி.எம். ஈஸ்வர ராவ் உத்தரவின் பேரில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் அபிஷேக் மற்றும் உதவி ஆணையர்  பிரமோத் நாயர் ஆகியோர்களது மேற்பார்வையில் திருச்சி RPF இன்ஸ்பெக்டர் K. P. செபாஸ்டியன் மற்றும் திருச்சி குற்றபிரிவு இன்ஸ்பெக்டர்  M.ரமேஷ்  தலைமையில் இன்று  திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை அங்கத்தினர் திருச்சி நடைமேடைகளில் சட்டவிரோதமான போதை பொருட்கள் கடத்தலுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்குரிய முறையில் மூட்டையுடன் வந்த ஒருவரை நிறுத்தி அவர் வைத்திருந்த மூட்டையை பிரித்து சோதனை நடத்தில் 2 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் நடத்தி விசாரணையில் அவரது பெயர் அக்ஷ்யா மாஜி என்பதும், ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர், அவர் ஹவுரா ரயில் மூலம் திருச்சிக்கு வந்துள்ளார் என்பது தெரிய வந்தது.  பின்னர் மேற்கூறிய குற்றம் சாட்டப்பட்ட நபருடன் கைப்பற்றப்பட்ட 2.0 கிலோ (தோராயமாக) கஞ்சா மற்றும் ஒரு Itel A05s மொபைல் ஆகியவை தேவையான சட்ட நடவடிக்கைக்காகவும், அகற்றுவதற்காகவும் கே.விஸ்வநாதன் SSI/NIB/CID/Tirchyயிடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.