மணப்பாறை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: கல்லூரி மாணவர்கள் இருவர் கைது

0 300
Stalin trichy visit

திருச்சி, டிச.1  மணப்பாறை அருகே வாகன சோதனையில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் கல்லூரி மாணவர்கள் இருவர் கைது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வளநாடு காவல்துறையினர் பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் விக்னேஷ் தலைமையில் நேற்று திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த . அப்போது திருச்சியில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த அதிவேக திறன் கொண்ட இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது வாகனத்தை ஓட்டி வந்தவர் மற்றும் பின்னால் இருந்தவர் இருவரிடமும் விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.

இதில் சந்தேகம் அடைந்த பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்த போது மதுரை மாவட்டம் தும்பபட்டியை சேர்ந்த கனி முகம்மது என்பவரது மகன் முகமது பிலால் 19 இவர் மதுரை தனியார் கல்லூரியில் பி.காம் CA பயின்று வருகிறார். மற்றொருவர் மதுரை மாவட்டம்மேலூர் முகமதியர் புறத்தைச் சேர்ந்த சாமி மகன் கெளதம் 20 இவர் மதுரை கல்லூரியில் BE மெக்கானிக்கல் பயின்று வருகிறார். இருவரது பேக்கையும் சோதனை செய்தபோது அதில் இரண்டு கிலோ கஞ்சா பொட்டலம் இருப்பது தெரியவந்தது. உடனடியாக இருவரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

மேலும் இவர்கள் ஒட்டி வந்த இருசக்கர வாகனம் மற்றும் இரண்டு செல்போன் ஒரு எடை போடு மிஷின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.