தொட்டியம் அருகே கார் மோதி 2 பேர் உயிரிழப்பு : 4 பேர் படுகாயம்

0 114
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 17  தொட்டியம் அருகே முன்னாள் சென்ற கார் மீது பின்னால் வந்து மோதிய விபத்தில் இருவர் பலி – நான்கு பேர் படுகாயம்.

திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, காட்டுப்புத்தூர் பகுதியில் அன்பழகன் என்பவர் கறிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையின் முன்பாக இரண்டு பைக்கில் வந்த நான்கு பேர் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக நாமக்கல் பகுதியை சேர்ந்த கௌசிக் என்பவர் தனது தாயாருடன் காரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த சொகுசு கார் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற கெளசிக் கார் மீது அதி வேகமாக மோதியுள்ளது. இதில் கௌசிக் ஓட்டி சென்ற கார் பைக் வந்து நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. கட்டுப்பாட்டை இழந்த கார் கறிக்கடைக்குள் புகுந்துள்ளது.
இந்த கோர விபத்தில் பைக்குடன் நின்று கொண்டிருந்த சின்னப்பள்ளி பாளையம் பகுதியை சேர்ந்த சுபாஷ் (40), ரமேஷ், ஸ்ரீ ராமசமுத்திரம் பகுதியை சேர்ந்த கொடியரசு (45), வடிவேல் மற்றும் காரில் இருந்த கௌஷிக் (35), அவரது தாயார் ஈஸ்வரி (60) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். பின்னால் வந்து மோதிய காரில் இருந்தவர்கள் இறங்கி அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் காரை ஓட்டி வந்தது யார் என்றும் காரில் உடன் வந்தவர்கள் யார் என்பதும் தெரியவில்லை. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக கரூர் மற்றும் நாமக்கல் பகுதி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தில் கூலி தொழிலாளிகள் சுபாஷ் மற்றும் கொடியரசு பலத்த காயமடைந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ரமேஷ் என்பவரது கால் துண்டானதால் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காட்டுப்புத்தூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சரவணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து காரை ஓட்டி வந்த கரூர் மாவட்டம் சோமூர் பகுதியைச் சேர்ந்த கூலி வேலை செய்து வரும் தரணிதரன் (23) என்பவரை போலீசார் கைது செய்ததுடன் அவருடன் பயணித்து வந்த தமிழரசன், பிரவீன்,ஜீவனாத், கோபிநாத் உள்ளிட்ட நான்கு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் சென்ற கார் மீது பின்னால் வந்த கார் மோதிய இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியான நிலையில் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் பெரியபள்ளி பாளையம் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. தற்போது அதனுடன் இணைந்து மதுபான பாரும் செயல்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் அப்பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகளினால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாகவும்
மது அருந்திவிட்டு வாகனங்களை கவனக்குறைவாகவும் அதிவேகம் வேகமாகவும் ஓட்டி வருவதால் இப்பகுதியில் விபத்துகள் அன்றாட நிகழ்வாக இருப்பதால்
டாஸ்மாக்கடை மற்றும் மதுபான பார் ஆகியவற்றை அப்பகுதியில் இருந்து அகற்றி வேறு இடத்திற்கு மாற்றக் கோரி சின்ன பள்ளிபாளையம், பெரிய பள்ளிபாளையம், காந்தி சிலை மற்றும் உன்னியூர் ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ​

தகவலறிந்து வந்த முசிறி டி.எஸ்.பி முத்துக்குமார் தலைமையில் காட்டுப்புத்தூர் இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி மற்றும் போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.