கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு

0 310
Stalin trichy visit

திருச்சி, ஆக.28 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தண்ணீர்பந்தலில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்ற தனியார் இன்ஜினியரிங் கம்பெனி ஊழியர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்

விருதுநகர் மாவட்டம் மேல ஆமந்துறைச் சேர்ந்தவர் ஜான்பாஸ்கோ(28) , அதேபோல் கடலூர் மாவட்டம் எறையூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர்  தமிழ்ச்செல்வன்(26). இவர்கள் இருவரும் திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் பொழுதை கழிப்பதற்காக மாலை துவாக்குடியில் இருந்து கல்லணைக்கு ஜான்பாஸ்கோ,தமிழ்ச்செல்வன் மற்றும் அவர்களுடன் பணிபுரியும் நண்பர்கள் என 4 பேர் வந்துள்ளனர்.பின்னர் குளிப்பதற்காக லால்குடி அருகே தண்ணீர் பந்தலில் உள்ள கொள்ளிடம் ஆற்றுக்கு வந்துள்ளனர்.அங்கு குளிப்பதற்காக தண்ணீரில் இறங்கிய ஜான் பாஸ்கோ மற்றும் தமிழ்செல்வன் ஆகிய இருவரும் எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி மாயமானார்கள்.

இதுகுறித்து திருச்சி தீயணைப்பு நிலையம் மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்ப இடத்திற்க்கு வந்த திருச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் நீரில் மூழ்கி மாயமான தனியார் நிறுவன ஊழியர்களை தீவிரமாக தேடினர். இதில் நேற்று்இரவு தமிழ்ச்செல்வனை சடலமாக மீட்டனர்.இன்று காலை ஜான்பாஸ்கோவை சடலமாக மீட்டனர். இச்சம்பவம் குறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.