வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 2 பேர் கைது

0 319
Stalin trichy visit

மணப்பாறையில் இணையதளம் மூலம் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் பதிவிறக்கம் செய்து விற்பணை. இருவர் கைது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை மேட்டுக்கடை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பணை செய்யப்படுவதாக வந்த ரகசிய தகவலையடுத்து மணப்பாறை போலீசார் நடத்திய அதிரடி  சோதனையில் மணப்பாறை அண்ணாவி நகரைச் சேர்ந்த  சுப்பிரமணியன் (வயது 52), புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள செவல்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 55) ஆகிய இருவரும் இரண்டு செல்போன்களை வைத்து இணைய வழியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை பதிவிறக்கம் செய்து விற்பணை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து  இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் மற்றும் இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்து மணப்பாறை போலீசார்  வழக்குப்பதிவு செய்து இரண்டு சுப்பிரமணியன்களையும் கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.