திருச்சி நீதிமன்றத்தில் 2 இளைஞர்கள் தற்கொலை முயற்சி
திருச்சி நீதிமன்றத்தில் மாடியிலிருந்து இரண்டு இளைஞர்கள் குதித்து தற்கொலை முயற்சி.
திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2020 ஆம் ஆண்டு சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டுகள் தண்டனை வழங்கி திருச்சி நீதிமன்ற தீர்ப்பு.
இன்று மாலை தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில் இரண்டு இளைஞர்களும் திருச்சி நீதிமன்ற முதலாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி.
இரண்டு இளைஞர்களும் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் கால்கள் முறிந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சி அரசு மருத்துவமனையில் போலீசார் குவிப்பு.