2026 சட்டமன்ற தேர்தல் தி.மு.க. அறிக்கை தயாரிப்புக்குழு கருத்து கேட்பு கூட்டம்

0 81
Stalin trichy visit

திருச்சி, ஜன.28 திராவிட முன்னேற்றக் கழகத்தின் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் கருத்து கேட்பு கூட்டம் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் அறிக்கை தயாரிப்பு குழுவில் தலைவர் கனிமொழி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு, பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.கே.எஸ் இளங்கோவன், அமைச்சர்கள் கோவி.செழின், ரவிசங்கர், ரகுபதி, டிஆர்பி ராஜா. பேராசிரியர் கான்ஸ்டட்டைன் ரவீந்திரன் மற்றும் துறை செயலாளர்கள் பங்கேற்றனர்.

திருச்சி தேர்தல் அறிக்கையில் திருச்சி பிரதானமாக வரவேண்டும்.

அப்போது இடைமறித்த அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில் அழுகிற பிள்ளை தான் பால் குடிக்க என்பார்கள் எங்களுக்கு வேளாண் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, சித்த மருத்துவ கல்லூரி, போக்குவரத்து நெரிசல் உள்ளது குடமுருட்டிலிருந்து தடுப்பணை கூடிய சுற்றுச் சாலை வேண்டும் என கேட்டு இருந்தோம். சுற்றுச்சாலையாக அல்லித்துறை வரை சென்று பெரிய வட்ட சாலையாக திருச்சியை சுற்றுச்சாலை அமைத்தால் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் இருக்கும் என கேட்டுள்ளோம்.

திருச்சியில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அரசு கலைக்கல்லூரி இருக்கிறது. ஆனால் கிழக்கு மற்றும் மணச்சநல்லூர் தொகுதிகளில் அரசு கல்லூரிகள் இல்லை இரண்டு தொகுதிகளிலும் கலை க்கல்லூரிகள் வேண்டும் கடந்த முறை ஏமாந்து விட்டேன் என நகைச்சுவை கூட தனது கோரிக்கை முன்வைத்தார்.

தொடர்ந்து பேசிய தேர்தல் அறிக்கையை குழு தலைவர் கனிமொழி நம்முடைய முதலமைச்சர் மக்களிடம் செல்லுங்கள் அவர்களை கோரிக்கைகளை கருத்துக்களையும் தேர்தல் அறிக்கையில் இணைத்து அது மக்கள் தேர்தல் அறிக்கையாக உருவாக்க வேண்டும் என்று உங்களிடம் பனித்திருக்கிறார். அனைத்தும் கருத்துக்களை எடுத்துக் கொள்ளப்படும் அது எது எல்லாம் சாத்தியமோ அதை எடுத்துக் கொள்வோம் என்பது உறுதியை தருகிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் பாரம்பரிய இயக்கமாக இருந்தாலும் இப்பொழுது இருக்ககூடிய புதிய கண்டுபிடிப்புகளையும் எங்களுடைய இணைத்துக் கொண்டு தயாராக இருக்கக்கூடிய இயக்கமாக இருக்கிறது என்பதை புரியும். எனவே, இப்பொழுது புதுமையான தேர்தல் அறிக்கையாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறினார்.

தொடர்ந்து சமூக ஆர்வலர்கள், தொழில் அதிபர்கள், பத்திரிக்கையாளர்கள் மேலும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் தேர்தல் அறிக்கை தொடர்பான மனுக்களை வழங்கினர்.

Leave A Reply

Your email address will not be published.