தொழிலாளி கொலை வழக்கில் நான்கு பேர் கைது : போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு
திருச்சி, ஜன.28 மணப்பாறை அருகே தொழிலாளி கொலை வழக்கில் நான்கு பேர் கைது
விரைந்து செயல்பட்ட போலீசாருக்கு எஸ்.பி செல்வ நாகரத்தினம் பாராட்டு
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே காவல்காரன்பட்டியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (வயது 51). வீடுகளுக்கு சிலிண்டர் வினியோகம் செய்யும் வேலை செய்து வந்தார். கடந்த 19ஆம் தேதி இரவு வீட்டின் முன் பகுதியில் கட்டிலில் தூங்கிய சிவசுப்பிரமணியன் 20 ஆம் தேதி காலை தலையில் ரத்த வெள்ளத்துடன் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக புத்தாநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கூடுதல் போலீஸ் சூப்பிரெண்டு கிருஷ்ணன் மேற்பர்வையில் மணப்பாறை போலீஸ் துணை சூப்பர் காவியா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அப்போது சம்பவம் நடந்த நாளில் உடலை முழுவதுமாக மறைத்துக் கொண்டு கையில் இரும்பு கம்பியுடன் வாலிபர் ஒருவர் சென்றது சிசிடிவி கட்சியில் பதிவாகி இருந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது காவல்காரன்பட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது 25) என்பதும் அதே பகுதியை சேர்ந்த 15 வயது பெண்ணை காதலித்ததை சிவசுப்ரமனியன் கண்டித்ததால் தான் கொலை செய்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.மேலும் இந்த கொலை வழக்கில் ராதாகிருஷ்னன் காதலி மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த ராதா கிருஷ்ணன் தம்பி சேரன் (வயது 20), சிவநேச செல்வன் வயது 19 உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
துரிதமாக செயல்பட்ட தனிப்படையை திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் பாராட்டி வெகுமதி அளித்தார்.