திருச்சியில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த 22 அரசு பள்ளி மாணவர்கள்

0 341
Stalin trichy visit

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான கவுன்சிலிங் நடந்து வருகிறது. இதில் சமீபத்தில் தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்பட்டது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவக்கல்லூரிகளை தேர்வு செய்தனர். அதன்படி மண்ணச்சநல்லூர் அரசு மகளிர் பள்ளி மாணவி தர்ஷிகா (நீட் மதிப்பெண் 357) தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி, தண்டலை புத்தூர் அரசு பள்ளி முகில் (349) திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதன் மருத்துவக்கல்லூரி, பச்சபெருமாள்பெட்டி பள்ளி சுபாஷ் (329) கன்னியாக்குமரி அரசு மருத்துவக்கல்லூரி, மேட்டு ப்பாளையம் பெண்கள் பள்ளி லோகஸ்ரீ (328)செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி, சிறுகாம்பூர் அரசு பள்ளி மாணவி மகேஸ்வரி (312) நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரியிலும் சேர்ந்துள்ளனர். மண்ணச்சநல்லூர் பெண்கள் பள்ளி ஹரிணி (311) புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி, முசிறி பெண்கள் பள்ளி பவதாரணி (306) திருச்சி கி.ஆ.பெ. அரசு மருத்துவக்கல்லூரி, பண்ணாங்கொம்பு அரசு பள்ளி ரகுபதி (305) விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி, மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் பள்ளி கவுசல்யா (281) பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி, மண்ணச்சநல்லூர் ஆண்கள் பள்ளி தினேஷ் (262) அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி, தண்டலைப்புத்தூர் அரசு பள்ளி சதீஷ்குமார் (280) கிருஷ்ணகிரி செயிண்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரியிலும் சேர்ந்துள்ளனர். மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் பள்ளி நான்சி (267) சிறுகாம்பூர் அரசு பள்ளி ஹேமலதா (263) துறையூர் அரசு பள்ளி அகல்யா (248) லால்குடி அரசு பள்ளி நிர்மல் இளவரசன் (240) மண்ணச்சநல்லூர் ஆணகள் பள்ளி ஆதித்யன் (234) பெண்கள் பள்ளி கமலி (224) ஆகிய 6 பேருக்கும் தனியார் பல் மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. மேலும் ஒவ்வொரு அரசுப்பள்ளியில் இருந்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மாதிரி பள்ளியில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட 5 மாணவர்களுக்கும் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்து ள்ளது. திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 22 பேருக்கு மருத்துவப்படிப்பு படிக்க இடம் கிடைத்து கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். கடந்தாண்டு 7.5 இட ஒதுக்கீட்டில் 9 பேரும் அதற்கு முந்தைய ஆண்டு 17 பேரும் மருத்துவப்படிப்பில் சேர்ந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.