சொர்க்கவாசல் திறப்பையொட்டி பாதுகாப்பு பணியில் 2,500 போலீசார்; நவீன கேமராக்கள் பொருத்தம்

0 242
Stalin trichy visit

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசியின் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்ள இருப்பதால் கோவிலை சுற்றி 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

கோவில் வளாகத்தில் 15-க்கும் மேற்பட்ட சுழலும் கேமராக்கள் மற்றும் 4 வீதிகளிலும் நவீன கேமரா பொருத்தப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் தயார் நிலையில் தீயணைப்புதுறையினர் உள்ளனர்.

திருச்சி மாநகராட்சி சார்பில் நடமாடும் கழிவறைகள், குடிநீர் வசதி செய் யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் சுகாதார வசதிக்காக மருத்துவ குழு தயார் நிலையில் உள்ளது என மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.