அதிகாலை 4:45க்கு திறக்கப்பட உள்ள ஸ்ரீரங்கம் பரமபதவாசல் – சிறப்பு அலங்காரம்!
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவில் ஆகும். இக்கோவிலுக்கு உலகம் முழுவதிலிருந்தும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் வருகை புரிவர்.

இங்கு ஆண்டுதோறும் ஏகாதேசி விழா நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டு நாளை அதிகாலை ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் பரமபத வாசல் 4.45 மணிக்கு திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் தற்போது சிறப்பு அலங்காரத்தில் பரமத வாசல் ஜொலிக்கிறது.