தடை செய்யப்பட்ட 26 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

0 303
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 1 சிறுகனூரில் உணவகம் ஒன்றில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட 26 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூர் திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் அரசால் தடை செய்யப்பட்ட 26 கிலோ புகையிலை பொருட்களை நேற்று இரவு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சிறுகனூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாண்டி அன்புச்செல்வன், பொன்ராஜ், கந்தவேல், மகாதேவன் ஆகியோர் சிறுகனூர் பகுதியில் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது சிறுகனூர் திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் சோதனை செய்த போது க அரசால் தடை செய்யப்பட்ட 26 கிலோ புகையிலைப் பொருள்களை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கைப்பற்றினர். பின்னர் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மேல் நடவடிக்கையாக புகையிலை பொருள் விற்பனை செய்த 3 பேரையும், பறிமுதல் செய்த புகையிலை பொருட்களையும் சிறுகனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அந்த உணவகத்திற்கு சீல் வைத்தனர். மேலும் உணவகத்தில் நான்கு சட்ட பூர்வ உணவு மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.