கூடலூரில் புதிய பேருந்து வழித்தடம் : சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்

0 258
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 1  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கூடலூர் கிராமத்தில் þ நேற்று மாலை புதிய பேருந்து வழித்தடத்தை லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சவுந்திரபாண்டியன் தொடங்கி வைத்தார்.

கூடலூரிலிருந்து கொளத்தூர், கண்ணனூர், ஒரத்தூர், மால்வாய், மேலரசூர் கல்லக்குடி, வழியாக சத்திரம் பேருந்து நிலையம் வரை செல்லும் புதிய பேருந்து வழித்தடத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்க்காக கூடலூரில் லால்குடி சட்டமன்ற உறுப்பினர்  சௌந்தரபாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
.
இந்நிகழ்ச்சியில் புள்ளம்பாடி ஒன்றிய குழு தலைவர் ரசியா ராஜேந்திரன், போக்குவரத்து துறை அதிகாரிகள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வடிவேல் ,பிரகாசம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செந்தாமரைக்கண்ணன், சோமு, சிவா,திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.