திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையம் மற்றும் ஜமால் முகமது கல்லூரி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகம், இந்திய தொழில் கூட்டமைப்பு, யங் இந்தியன் அமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் 2000-த்திற்கும் மேற்ப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கான காலி பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு வரும் 27ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் இளநிலை, முதுநிலை தேர்ச்சி பெற்ற
மற்றும் இறுதியாண்டு பயிலும் அனைத்து துறை மாணவர்கள் மற்றும் 10, 12-ம் வகுப்பு மற்றும் டிப்ளமோ படித்த மாணவர்களும் பங்கு பெறலாம். விருப்பமுள்ள மாணவர்கள் தங்களது சுயவிபரத்தை http://bechrusa.bdu.ac.in/jobfair/ மூலம் விண்ணப்பக்கலாம். மேலும் விபரங்களுக்கு 99449 43240 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம். எனவே இந்த வாய்ப்பை மாணவர்கள் குறிப்பாக கிராமபுற மாணவர்கள் அதிகம் பயன்படுத்திகொள்ள திருச்சி தென் மேற்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் கேட்டுகொள்கிறோம் என மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.