திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டம்; 28ம் தேதி நடக்கிறது!
திருச்சி மாநகராட்சி புதிய மேயர் அன்பழகன் தலைமையில் வரும் 28ம் தேதி காலை 10.15 மணிக்கு மாநகராட்சி சாதாரண கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாநகராட்சியின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு மைய அலுவலகத்தை மேம்படுத்த அனுமதி அளிப்பது, இதற்கு உத்தேச செலவு ரூ.40 கோடியை அரசிடமி ருந்து பெறுவதற்கு உரிய கருத்துரு அனுப்பி வைப்பதற்கு அனுமதி அளிப்பது, அரசாணையின்படி 5 வார்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளதில், நான்கு வார்டு குழு அலுவலகத்துக்கு கட்டிடம் மற்றும் அதற்கான அலுவலகங்கள்
உள்ளது. வார்டு குழு 3 அலுவலகத்திற்கான கட்டிடத்தினை புதிய வார்டு 36 (பழைய வார்டு எண் 29) ஜெகநாதபுரம் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டிவளாக பகுதியில் புதிதாக கட்டுவதற்கு அனுமதி அளிப்பது, பொன்மலை கோட்டம் 40வது வார்டு எஸ்பிஐ காலனி, வின்பாரடைஸ் பகுதியில் நவீன இறகுபந்து உள்விளையாட்டு அரங்கம் கட்டும் பணி மேற்கொள்ளுதல், வார்டு 64ல் உள்ள செல்லம் நகர் பகுதியினை காலிமனை வரிவிதிப்பதற்கு ஏ மண்டலத்திலும், சொத்துவரிவிதிப்பதற்கு
மண்டலத்திலும் நிர்ணயம் செய்ய ஏதுவாக கணினியில் பதிவேற்றம் செய்து வரி விதிப்பும் செய்து கொள்ள அனுமதி அளிப்பது, மாநகராட்சியின் பிறப்பு, இறப்பு சம்பந்தமான பதிவுகளை கணினியில் பதிவேற்ற செய்ய ஒப்பந்தம் பெறப்பட்ட தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தக்காலம் கடந்த பிப்ரிவரி 28ம் தேதியுடன் முடிந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலால் ஒப்பந்தப்புள்ளி கோர இயலாதநிலையில் அந்த நிறுவனம் மார்ச் 1ம் தேதி முதல் ஒப்பந்தப்புள்ளி கோரும் வரை ஒப்பந்த காலத்தை நீட்டிப்பு செய்வது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.