திருச்சி மாநகராட்சி 42-வது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
திருச்சி, செப்.26 திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 3வார்டு எண்42 பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விக்னேஷ் நகர் சௌபாக்யா மகாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களை பதிவேற்றம் செய்வதையும் முகாமின் செயல்பாடுகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுடன் கலந்துரையாடி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சரவணன், வருவாய் கோட்டாட்சியர் அருள், மண்டல குழு தலைவர் மதிவாணன், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.