3 புதிய மின் மாற்றிகள்; எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் துவக்கி வைத்தார்
திருச்சி கிழக்கு தொகுதி கலைஞர் நகருக்கு உட்பட்ட 37, 38வது வார்டுகளில் உள்ள சி.கே.பி.கார்டன், கே.சாத்தனூர், லூர்துசாமி பிள்ளை தெரு ஆகிய பகுதிகளில் மின் பற்றாக்குறையை போக்கும் விதமாக 3 புதிய மின் மாற்றிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பகுதி பொறுப்பாளர் மணிவேல், வட்ட பொறுப்பாளர்கள் விஜய் ஆனந்த், எஸ்.கே.மூர்த்தி, மின்வாரிய செயற்பொறியாளர் சு.சிவலிங்கம், உதவி செயற்பொறியாளர் இ.சந்திரசேகர், சிறப்பு நிலை ஆக்க முகவர் சந்திரமௌளீஸ்வரன், பகுதி இளைஞரணி துணைச் செயலாளர் மாரிமுத்து, சந்திரசேகர், மற்றும் வட்ட, பகுதி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.