கிராம நிர்வாக அலுவலரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 3 பேர் கைது

0 167
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த  தொட்டியம் அருகே உள்ள காட்டுப்புத்தூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் வெங்கடேஷ்.
இவர் இன்று அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அலுவலகத்திற்கு வந்த மூன்று நபர்கள் தாங்கள் ஊழல் மற்றும் தடுப்பு பிரிவு கண்காணிப்பு குழு விஜிலென்ஸ் அதிகாரிகள் என்றும் உங்கள் மீது நிறைய புகார்கள் வருகிறது. உங்களை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் எனக் கூறி மிரட்டி உள்ளனர்.

மிரட்டல் விடுத்த நபர்கள் மீது சந்தேகம் கொண்ட கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேஷ் காட்டுப்புத்தூர் காவல் நிலையத்திற்கு போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில் மூன்று பேரில் ஒருவர் விஜிலென்ஸ் அதிகாரி என வைத்திருந்த அடையாள அட்டை போலியானது என்பது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில்தொட்டியம் தாலுக்கா சித்தூர் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் சசிகுமார் 43 நாமக்கல் மாவட்டம் தூசூர் பகுதியைச் சேர்ந்த செல்வநாயகம் மகன் கவின் 24 நாமக்கல் மாவட்டம் எண் .கொசவம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பிரவீன் குமார் 25 ஆகியோர் என்பதும் கடந்த மூன்று வருடங்களாக ஊழல் மற்றும் தடிப்பு பிரிவு கண்காணிப்பு குழு அதிகாரிகள் எனக் கூறி அரசுஅரசுத்துறை அலுவலர்கள் பலரையும் ஏமாற்றி பணம் பறித்து வந்தது தெரிய வந்தது.

இச்சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மூன்று பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.விஜிலென்ஸ் அதிகாரிகள் போல் போலியாக நடித்த நபர்கள் பயன்படுத்திய சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.