விளையாட்டு போட்டியில் பங்கேற்க சென்ற 4 மாணவிகள் காவிரியாற்றில் மூழ்கி உயிரிழப்பு

0 461
Stalin trichy visit

திருச்சி, பிப்.15 திருச்சி மாவட்டம் ஏழூர்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி குடியரசு தின விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டம், பிலிப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றியம் நடுநிலைப் பள்ளியை சேர்ந்த 15 மாணவ, மாணவிகள் கால் பந்தாட்ட வீரர்கள். உடற்கல்வி ஆசிரியர் உதவியுடன் கலந்து கொண்டு குடியரசு தின விளையாட்டுப் விளையாட்டு போட்டி முடித்துவிட்டு கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி கதவணையை பார்வையிட சென்றுள்ளனர். அப்போது கதவணைக்கு அருகேயுள்ள செல்லாண்டியம்மன் கோவில் சாமி கும்பிட்டு விட்டு மாணவிகள் ஆற்றிற்குள் இறங்கி உள்ளனர். அப்போது ஒவ்வொரு மாணவியாக தண்ணீரில் இறங்கிய நிலையில் திடீரென மாணவிகள் சிலரை தண்ணீர் இழுத்துச் சென்றது. அப்போது அவர்களை காப்பாற்ற முயற்சித்த மாணவிகள் தமிழரசி, சோபிகா, இனியா, லாவண்யா என நான்கு மாணவிகள் நீரில் மூழ்கி நிலையில். அருகில் இருந்தவர்கள் பார்த்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மாணவிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர் சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு 4 மாணவிகளை சடலமாக மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க சென்ற மாணவிகளில் 4 பேர் காவிரியாற்றில் மூழ்கி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.