பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணி – மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி, பிப்.15 திருச்சி மாவட்டத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணிகள் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட வயலூர் சாலை பகுதி மற்றும் தென்னூர் உழவர் சந்தை ஆகிய இடங்களில் நடைபெற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு மஞ்சள் பைகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாநகராட்சி நகர்நல அலுவலர் மணிவண்ணன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் குணசீலன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.