வாலிபரை தாக்கிய வழக்கில் 4 பேருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை
திருச்சி,நவ.22 வாலிபரை தாக்கிய வழக்கில் 4 பேருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை மணப்பாறை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அத்திகுளத்தை சேர்ந்த சரவணன் என்பவர் மணப்பாறை பகுதியைச் சேர்ந்த கார்த்தி, சிவா, மற்றும் கேசவன், பிரகாஷ், ஆகியோருக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சனை சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்த நிலையில் இவர்கள் சரவணன் என்பவரை தாக்கியதாக மணப்பாறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு இருந்து வந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணை மணப்பாறை நீதிமன்றத்தில் நேற்று மேற்கண்ட நபர்கள் நான்கு நபர்களுக்கும் மணப்பாறை சார்பு நீதிமன்ற நீதிபதி டாக்டர் எஸ் ராஜசேகர் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விடுத்து உத்தரவிட்டார் மேற்கண்ட நான்கு நபர்களையும் மணப்பாறை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.