லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 5 பேர் கைது

0 317
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 13 திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதிகளான கருங்குளம், பொன்னம்பலம் பட்டி, நடுப்பட்டி, கல்பட்டி ஆகிய பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த கருங்குளம் ஜாகோப் (51), வைரம்பட்டி அந்தோணிசாமி (53), பழனிவேல் (40), வையம்பட்டி முஜிப்ரஹ்மான் (42) ஆகிய நான்கு பேரை வையம்பட்டி காவல்துறையினரும், கோவில்பட்டியில் லாட்டரி விற்பணையில் ஈடுபட்ட தாதகவுண்டம்பட்டியைச் சேர்ந்த சின்னத்துரை (65) என்பவரை வளநாடு காவல்துறையினரும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 100 லாட்டரி சீட்டுகள் மற்றும் 700 ரூபாய் பணத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.