துறையூர் அருகே இரண்டு வீடுகளில் 50 சவரன் தங்க நகைகள் திருட்டு
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கீரம்பூர் கிராமத்தில் அடுத்தடுத்த இரண்டு வீடுகளில் 50 சவரன் தங்க நகைகள் திருட்டு மர்மநபர்கள் கைவரிசை.
துறையூர் அருகே உள்ள கீரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் இவருடைய மகன்கள் ஆன சிவகுமார் சசிகுமார் இருவரும் அடுத்தடுத்த வீடுகளில் குடியிருந்து வருகிறார்கள் இந்நிலையில் சிவகுமார் தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் வெளியூர் சென்றுள்ளார் சசிகுமார் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார் சசிகுமார் மனைவி வீட்டை பூட்டி விட்டு உள்ளூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு நேற்று இரவு சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் காலையில் எழுந்து வந்து பார்த்த பொழுது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது உள்ளே சென்று பார்த்தபோது சசிகுமாரின் வீட்டில் 44 சவரன் தங்க நகைகளும் சிவகுமார் வீட்டில் ஆறு சவரன் தங்க நகைகளும் திருடு போனது தெரிய வந்தது தகவல் அறிந்த துறையூர் போலீசார் மோப்பநாய் உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அடுத்தடுத்த வீடுகளில் 50 சவரன் தங்க நகைகள் திருடு போன சம்பவம் துறையூர் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.