வாடகை செலுத்தாத 57 கடைகளுக்கு சீல் : மாநகராட்சி நடவடிக்கை
திருச்சி, அக்.2 திருச்சி மேலரண் சாலையில் மாநகராட்சிக்கு நீண்டகாலமாக வாடகை செலுத்தாக 57 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் பணியாளர்கள் நேற்று பூட்டி சீல் வைத்தனர்.
திருச்சி மாநகராட்சி, வார்டு எண்.20, மேலரண் சாலையிலுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 57 நிலவாடகை கடைகள் வரியில்லா இனத்தின் கீழ் 30 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த 57 நிலவாடகை கடைகளுக்கான நிலவாடகை மறு நிர்ணயம் செய்யப்பட்டது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளின் மீது கடந்த 30.4.2025 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் நிலவாடகை தொகையை இறுதி செய்வதற்காக குத்த கைதாரர்களுக்கு நேரடி விசாரணைக்கு வாய்ப்பு வழங்குமாறும், மேற்படி உத்தரவில் விசாரணை இறுதி செய்யப்படும் வரையில் 14.3:2021 முதல் 13.3.2024 வரையிலான காலத்திற்கு ஒரு சதுரஅடிக்கு ரூ.10 எனவும், அதன் பின் 14.3.2024 முதல் அன்றைய தேதி வரை வருடத்திற்கு 15%உயர்வு வீதம்,மேல்முறை வீட்டுதாரர்களால் செலுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
அரசின் வழிகாட்டுதல் மதிப்பின்படி மாதம் ஒன்றுக்கு அடிக்கு ரூ.59 வீதம் 2021 இல் நிலுவை இறுதி செய்யப்பட்டு நிலுவைத் தொகை முழுவதையும் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்து. தவறினால் அரசு வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் மாநகராட்சி குத்தகை பதிவுகளிலுள்ள குத்தகைதாரர்களுக்கு வாடகை இறுதி செய்வது தொடர்பாக நேரடி விசாரணைக்கு வாய்ப்பு வழங்கும் பொருட்டு 22.7.2025 மற்றும் 23.7.2025 ஆகிய இருதினங்களில் நேரடி விசாரணைக்கு குத்தகை உரிமத்திற்கான ஆவணங்களுடன் விசாரணையில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு விசாரணை நடந்தது.
மேலும் அரசு வழிகாட் டுதல் மதிப்பின்படி மாதம் ஒன்றுக்கு ஒரு ச.அடிக்கு ரூ.59 வீதம் வாடகையாக 2021ல் நிலவாடகை இறுதி செய்யப்பட்டு நிலுவைத் தொகை முழுவதையும் செலுத்துமாறு 3.9.2025 மற்றும் 26.9.2025ல் நிலுவை வாடகை தொகையில், தாங்கள் செலுத்திய தொகை போக மீதம் உள்ள நிலுவைத்தொகையை அறிவிப்பை பெற்றவுடன் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. தவறும்பட்சத்தில் அரசு வழிகாட்டுதலின்படி மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் நிலுவைத் தொகை செலுத்தப்படவில்லை. இதனால் மாநகராட்சிக்கு ரூ.49.87 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து வாடகை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டும், வாடகை செலுத்தாததால் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாநகர காவல்துணை ஆணையர் ஈஸ்வரன் ,மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சமி ஆகியோர் முன்னிலையில், காவல்துறை பாதுகாப்புடன் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, நகரபொறியாளர் சிவபாதம் மற்றும் பணியாளர்கள் கடைகளை பூட்டி சீல் வைத்தனர். துணை ஆணையர் ஈஸ்வரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புக்கு நிறுத் தப்பட்டிருந்தனர்.