முசிறி அருகே ஓடும் காரில் தீடீர் தீ விபத்து

0 128
Stalin trichy visit

திருச்சி, அக்.2 திருச்சி மாவட்டம் திருச்சி – நாமக்கல் சாலையில் முசிறி அருகே
மஞ்சகோரை என்ற இடத்தில் சாலையில் வந்த கார் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் நகரைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர் தனது மனைவி சவிதா உடன் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்துள்ளார். முசிறி அருகே மஞ்ச கோரை என்ற இடத்தில் கார் வந்தபோது கார் தீ பிடித்தது.  தகவலறிந்த  முசிறி மற்றும் திருச்சி பி ஹெச் எல் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தன.

கார் தீப்பிடித்தவுடன் அதில் இருந்தவர்கள் இறங்கியதால்  உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. சம்பவம் குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.