திருச்சி விமான நிலையத்தில் 659 கிராம் கடத்தல் தங்கம்- செல்போன் பறிமுதல்

0 311
Stalin trichy visit

திருச்சி, பிப். 11 திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு துபாயில் இருந்து இண்டிகோ விமானம் வந்து சேர்ந்தது அதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்போது ஒரு ஆண் பயணி கொண்டு வந்த கைப்பையை சோதனை செய்தபோது பசை வடிவிலான ஒரு பொருள் இருப்பதை கண்டறிந்து அதை பறிமுதல் செய்து சோதனை செய்ததில் 659 கிராம் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 5 ஆப்பிள் செல்போன்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்டதும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பயணியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 47லட்சத்து 67ஆயிரத்து 198 ரூபாயும், செல்போன்கள் 4லட்சத்து 25ஆயிரம் என அதிகாரிகளால் மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.