நவீன சேமிப்பு தளங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக்காட்சி மூலம் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் மேற்கூரையுடன் அமைக்கப்பட்டுள்ள நவீன சேமிப்புத் தளங்களை திறந்து வைத்து புதிய வட்ட செயல்முறைக் கிடங்குகள் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதைத் தொடர்ந்து திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அதவத்தூரில் 6200 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட கான்கிரீட் தளத்துடன் கூடிய மேற்கூரை திறப்பு விழா நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கலந்து கொண்டு சேமிப்பு கிடங்கு வளாகத்தினை பார்வையிட்டார். இந்நிகழ்வில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக கழக மண்டல மேலாளர் பாலமுருகன், வட்டாட்சியர் குணசேகரன், உதவி செயற்பொறியாளர் ராஜி, உதவி பொறியாளர் சிவக்குமார், தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிககள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.