ஆசிரியை வீட்டில் 7 1/2 பவுன் நகை திருட்டு
திருச்சி செப்.27 திருச்சி பொன்மலைப்பட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 38). இவர் ஆன்லைன் சர்வீஸ் மையம் நடத்தி வருகிறார். இவரது மனைவி ஆசிரியை. இவரது வீட்டிலிருந்த ஏழரை பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. இதுகுறித்து வேலைக்கார பெண் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து குமார் பொன்மலை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வீரசோழன் வழக்குப்பதிந்து வேலைக்கார பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகிறார் .