அடையாளம் தெரியாத ஆண் சடலம்
திருச்சி செப்.27 திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் பிரபலமான ஹோட்டல் ஒன்று உள்ளது. அந்த ஓட்டல் அருகில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கிடந்தது. அவர் ? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. இது குறித்து ஓட்டல் ஊழியர் ராஜாராம் என்பவர் கோட்டை போலீசுக்கு தகவல் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேல் மற்றும் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து,கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.