போலி தங்கக் கட்டிகள் விற்பனை செய்த 7 பேர் கைது

0 304
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 8 திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகேயுள்ள அம்மன்குடியைச் சேந்த வெங்கடேஷ், ஜீயபுரம் பகுதியில் நகைக்கடை வைத்துள்ளார். இக்கடை ஊழியரான அன்பழகன் கடந்த ஜூலை 2 ஆம் தேதி கடையில் இருந்தபோது, இரு கார்களில் வந்த 7 பேர் தங்களிடம் 2 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பதாகவும், அவற்றை குறைவான விலைக்கு விற்பதாகவும் கூறியுள்ளனர். அதற்கு அன்பழகன் தற்போது பணமில்லை, உரிமையாளர் வந்ததும் கூறுகிறேன் எனத் தெரிவித்து உள்ளார். ஆனாலும் ரூ.50 ஆயிரம் முன்பணமாவது கொடுத்தால் போதும் எனக் கூறி பணம் கேட்டு வற்புறுத்தி ரூ.5000க்கான ஒரு சிறிய தங்கக் கட்டியை கொடுத்துவிட்டு மீதிப் பணத்தை வாங்க வரும்போது தங்கக் கட்டிகளைத் தருவதாகக் கூறிச் சென்றனர்.
பின்னா தான் அது போலி எனத் தெரியவந்தது. இதையடுத்து அவர் ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தீவிர தேடுதல் வேட்டையின் போது முக்கொம்பு பகுதியில் அந்த இரு கார்களும் நின்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியதில் , அவர்கள் மணப்பாறையை சேர்ந்த சகாய ஆரோக்கியதாஸ், தங்கத்துரை, திண்டுக்கல்லை சேர்ந்த முருகன், கரூரை சேர்ந்த சூசைராஜ் மற்றும் மு.பாண்டியன் திருவண்ணாமலையை சேர்ந்த ஆதாம்சேட்டு (40), கேரளவை சேர்ந்த கனகராஜ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து தலா 100 கிராம் எடையுள்ள 35 போலி தங்கக் கட்டிகள், ரொக்கம் ரூ. 20, 000 மற்றும், இரு காகள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.