திருச்சியில் 75 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல்

0 338
Stalin trichy visit

திருச்சியில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ் பாபு தலைமையிலான குழுவினர் மாநகர் முழுவதும் தொடர் சோதனைகளை நடத்தி கலப்பட பொருட்களை பறிமுதல் செய்வதோடு அந்த நிறுவனங்கள் மீது வழக்கு பதிந்து சிறைக்கு அனுப்பும் சீறிய முயற்சியை திறம்பட செய்துக்கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையில் திருச்சி கே.கே.நகர் பகுதியில் இருந்து வந்த பல்வேறு புகார்களின் அடிப்படையில் நேற்று இரவு 03.04.2022 செவ்வாய்க்கிழமை கே.கே.நகரில் உள்ள ஐயங்கரன் பேக்கரி மற்றும் தேநீர் கடையில் திடீர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது சுமார் 6 கிலோ கலப்பட டீ தூள் அங்கே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அந்த விசாரணையின் தொடர்ச்சியாக கே.கே.நகர் சீதாதேவி கோயில் அருகில் புஷ்பராஜ் என்ற நபரிடம் 75 கிலோ கலப்பட தேயிலை தூளும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், விசாரணையில் அவரது சகோதரன் பொன்னகர் கருணாகரன் என்பவரிடமிருந்து சுமார் தேயிலை தூள் 240 கிலோ கலப்பட தேயிலைத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவரது மற்றொரு சகோதரர் விஜயகுமார் என்பவரிடம் சுமார் 160 கிலோ கலப்பட தேயிலை தூளும் மற்றும் கலப்படத்திற்கு பயன்படுத்தும் ரசாயனப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டு ஆக மொத்தம் 481 கிலோ கலப்பட தேயிலைத் தூள் ஒரே நாளில் திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்டன. கலப்படத்தேயிலைத்தூள் பறிமுதலையடுத்து மேற்கண்ட நால்வரின் மீது வழக்கு தொடுப்பதற்காக 8 சட்டபூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது.

மேலும், தேயிலை தூள்களை மொத்தமாக விற்பனை செய்பவர்கள் கலப்பட தேயிலை தூளை விற்பனை செய்யக்கூடாது என்றும், கலப்பட தேயிலைத் தூள் குறித்து டீ கடை ஊழியர்களோ, பொதுமக்களோ தெரிந்தால் உடனடியாக உணவு பாதுகாப்புத்துறையை அனுகவும் என உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மருந்து நிர்வாகத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தெரிவித்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.