ரேஷன் கடையில் புகுந்த 8 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு உயிருடன் மீட்பு

0 472
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 29  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையில் இன்று மதியம் ஒரு மணி அளவில் 8 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு புகுந்தது. பாம்புபிடி வீரர் பாம்பை உயிருடன் பத்திரமாக மீட்டார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ள மணலை தெருவில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் வழக்கம்போல் கடை பணியாளர்கள் பொதுமக்களுக்கு பொருட்களை விநியோகம் செய்து கொண்டிருந்தனர்.அப்போது திடீரென ரேஷன் கடையில் இன்று மதியம் 8 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு புகுந்தது. பாம்பை கண்டதும் கடை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அலறி அடித்து வெளியே ஓடினார்.

இது குறித்து உடனடியாக பாம்பு பிடி வீரர் பூபேஷ்க்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த பாம்பு பிடி வீரர் பூபேஷ் ரேஷன் கடையில் புகுந்த சாரைப்பாம்பை லாவகமாக பிடித்து கொள்ளிடம் வனப்பகுதியில் விடுவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.