அரசு வேளாண் கல்லூரியில் நடைபெற்ற 80 வது ஆண்டு சுதந்திர தின விழா
திருச்சி, ஆக.17 அரசு வேளாண் கல்லூரியில் நடைபெற்ற 80 வது ஆண்டு சுதந்திர தின விழா
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் வேளாண் கல்வி நிறுவனம் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இக்கல்வி நிறுவனத்தில் இரண்டு ஆண்டு வேளாண் பட்டய படிப்பு மற்றும் 4 ஆண்டு இளங்கலை வேளாண் பட்டபடிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது. தற்போது இக்கல்வி நிறுவனத்தில் சுமார் 500 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பயிற்று வருகின்றனர்.இக்கல்லூரியில் ஒவ்வொரு வருடமும் சுதந்திர தின விழா சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்த வருடம் 80 -வது ஆண்டு சுதந்திர தின விழா 15-08-2026 (சனிக்கிழமை) அன்று மிக சிறப்பான முறையில் நடைப்பெற்றது.
இவ்விழாவில் இளங்கலை வேளாண்மையில்( கரூர்) விளையாட்டு மன்ற செயலாளர் வரவேற்புரை வழங்கினார்.இந்த 80 ஆவது சுதந்திர தின விழாவில் இக்கல்வி நிறுவனத்தின் முதல்வர் முனைவர் மு. அசோகன் கலந்து கொண்டு மூவர்ணக் கொடியை ஏற்றி, சிறப்புரையாற்றி மாணவ மாணவிகளுக்கு இந்தியா வல்லரசு ஆவதற்கு இளைஞர்களின் வலிமை மிக முக்கியம் என்பதை பற்றி மிக விரிவாக எடுத்துரைத்தார்.
பின்னர் விழாவில் பங்கேற்ற குழந்தைகளுக்கும், மாணவ மாணவியர்களுக்கும் இனிப்புகளை வழங்கினார். 80 வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடைபெற்றன, இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு இக்கல்லூரியின் முதல்வர் பரிசுகளை வழங்கினார். இறுதியாக விளையாட்டு மன்ற செயலாளர் இளங்கலை வேளாண்மையில் (கீழ்வேளூர்) இவ்விழாவில் பங்கேற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும், ஆசிரிய பெருமக்களுக்கும் இக்கல்லூரியில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களுக்கும் நன்றி கூறினார்.
உதவி உடற்கல்வி இயக்குனர் முனைவர் க. சரவணகுமார் அனைத்து ஏற்பாடுகளும் செய்தார்.