திருச்சி கோட்டத்தில் ரயில்கள் டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்களிடம் ரூ.7.38 லட்சம் அபராதம் வசூல்
திருச்சி, ஆக.17 திருச்சிகோட்ட ரெயில் களில் ஒரே நாளில் டிக் கெட் இன்றி பயணித்த – வர்களிடம் இருந்து ரூ.7.38 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் பாலக் ராம் நேகி வழிகாட்டுதலின் படி திருச்சி முதுநிலை * கோட்ட வணிக மேலாளர் வெங்கடராகவன் தலைமையில் கடந்த 14-ந்தேதியன்று ரெயில் களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது டிக்கெட் இன்றி பயணித்த 545 பயணிகளிடம் இருந்து ரூ.4 லட்சத்து 44 ஆயிரத்து 474 அபராதம் வசூலிக்கப் பட்டது.
இதில் முன்பதிவில்லா டிக்கெட் வைத்துக் கொண்டு முன்பதிவு பெட்டியில் பய ணித்த 396 பயணிகளுக்கு ரூ.2 லட்சத்து 84 ஆயிரத்து 379 அபராதம் விதிக்கப்பட் டது. அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் லக்கேஜ் கொண்டு வந்த 7 பய ணிகளிடம் இருந்து ரூ.3 ஆயி ரத்து 180 அபராதம் வசூலிக் கப்பட்டுள்ளது.
இதர விதிமீறல்களுக்காக 5 பயணிகளிடம் இருந்து ரூ.6 ஆயிரத்து 200 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் 953 பயணிக ளிடம் இருந்து ரூ.7 லட்சத்து 38 ஆயிரத்து 233 அபராத மாக வசூலிக்கப்பட்டு உள் ளது.
திருச்சி கோட்ட டிக்கெட் பரிசோதனைக் குழுவினரால் ஒரே நாளில் மேற் கொள்ளப்பட்ட சோதனையில் இதுவரை வசூலிக்கப் பட்டுள்ள அதிகபட்ச அப ராதத் தொகை இதுவாகும் என உதவிவணிக மேலாளர் மற்றும் கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ஜெயந்த் தெரிவித்துள்ளார்.