பாஜகவை எதிர்க்கும் கொள்கையில் திமுக தெளிவாக உள்ளது – அமைச்சர் ராஜேஷ்குமார் பேட்டி

0 19
Stalin trichy visit

திருச்சி, ஆக.17  பாஜகவை எதிர்க்கும் கொள்கையில் திமுக தெளிவாக உள்ளது – திருச்சியில் அமைச்சர் ராஜேஷ்குமார் பேட்டி

திருச்சியில் நேற்று  நடைபெற்ற இந்திய சுற்றுலா முகவர்கள் சங்கத்தின் 75வது ஆண்டுவிழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் கலந்து கொண்டார்
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

காங்கிரஸ் கட்சியில் எந்தவிதமான கோஷ்டிகளும் கிடையாது. ராகுல் காந்தியின் முகம் தான் எங்கள் முகம். நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாகச் செயல்பட்டு வருகிறோம்.

‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்பதை தமிழ்நாட்டில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு புதிய யுகத்தில் புதிய ஆட்சியுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறோம்.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு லஞ்சம், ஊழல் இல்லாத அரசாக இருக்கிறது. தவெக அரசு காங்கிரஸ் கட்சியோடு முழுமையாக ஒத்துப்போகக்கூடிய அரசாகத் திகழ்கிறது.

பாஜகவைக் கொள்கை எதிரியாகக் கொண்டுள்ள தவெக அரசு, தமிழகத்திற்கான நிதிகளை பெறும் சூழலில் இணக்கமாக செயல்படுகிறது.
இந்தியா கூட்டணியில் தவெக உள்ளதா என்ற கேள்விக்கு, “தவெக எங்களுடன் தான் உள்ளது” என்று அமைச்சர் உறுதியாகப் பதிலளித்தார்.

பாஜகவை எதிர்க்கும் கொள்கையிலும், தமிழக மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் சமயங்களிலும், திமுக தெளிவாக உள்ளது.

பாஜகவை எதிர்ப்பதில் திமுக எங்கள் வரிசையில் தான் நிற்கிறது.

இந்தியா கூட்டணியில் த.வெ.க எப்போது இணையும் என்கிற கேள்விக்கு அவர்கள் எங்களோடு தான் இருக்கிறார்கள் என பதில் அளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.