29-ந் தேதி மண்டல அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாம்

0 403
Stalin trichy visit

திருச்சி மத்திய மண்டல அஞ்சல்துறை தலைவர் கோவிந்தராஜன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
மண்டல அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் திருச்சி தலைமை தபால் நிலைய கட்டிட வளாகத்தில் அஞ்சல்துறை தலைவர் அலுவலகம் மத்திய மண்டலம் திருச்சி என்ற முகவரியில் வருகிற 29-ந் தேதி காலை 11 மணியளவில் நடைபெறுகிறது. வரும் 22-ந் தேதி குறைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாளாகும்.

தபால் சம்பந்தப்பட்ட புகாரில், தபால் அனுப்பப்பட்ட தேதி மற்றும் நேரம், அனுப்பியவர் மற்றும் பெறுபவரின் முகவரி, ரசீது எண், பணவிடை (மணியார்டர்), துரித தபால், பதிவு தபால் ஆகியவற்றுக்கான விவரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும். புகாரானது சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தமாக இருப்பின், கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பாலிசிதாரரின் பெயர் மற்றும் முழு முகவரி, பணம் கட்டிய முழு விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், அஞ்சல்துறை சம்பந்தப்பட்ட கடிதத் தொடர்புகள் ஏதேனும் இருப்பின் அதனையும் புகாருடன் இணைக்க வேண்டும்.

ஏற்கனவே மனு கொடுத்து அதற்குரிய அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அளித்த பதில் திருப்தியடையாதவர்கள் மட்டும் தங்களது குறைகளை அனுப்பி வைக்க வேண்டும். புதிய புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. குறைகளை நா.ராஜகோபாலன் உதவி இயக்குனர்(காப்பீடு மற்றும் புகார்), அஞ்சல்துறை தலைவர் அலுவலகம், மத்திய மண்டலம், திருச்சி- 620001 (செல்-9443979004) என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தபால் உறையின் மீது முன்பக்க மேல் பகுதியில் அஞ்சல் சேவை குறைதீர்க்கும் முகாம் டிசம்பர்-2021 என்று குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும்.

கொரோனா பரவாமல் தடுக்க தபால் சேவை குறைதீர்க்கும் முகாமை google meet அழைப்பு மூலமாக நடத்தப்படும். எனவே தங்களின் தற்போதைய வீட்டு முகவரி, செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் அருகில் இருக்கும் அஞ்சலக முகவரி ஆகியவற்றை குறிப்பிட்டு தபால்களை மேற்கூறிய முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.