திருச்சி BHEL நிறுவனத்தில் 15 தினத்திற்குள் மீண்டும் ஆக்ஸிஜன் உற்பத்தி திருச்சி சிவா எம்.பி.

0 200
Stalin trichy visit

திருச்சி BHEL நிறுவனத்தில் 15 தினத்திற்குள் மீண்டும் ஆக்ஸிஜன் உற்பத்தி மேற்கொள்ளப்படும் எனMP திருச்சி சிவா கூறினார் .திருச்சி பெல் நிறுவனத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த ஆக்சிஜன் உற்பத்தி மையம் செயல்பாடு கடந்த 2013 ஆம் ஆண்டு வாக்கில் நிறுத்தப்பட்ட நிலையில் அதே இடத்தில் புதிதாக ரூபாய் 10 லட்சம் செலவில் புதிய ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் நிறுவுவதற்கு BHEL நிறுவன உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.. ஓய்வு பெற்ற ஊழியர்கள் பங்களிப்புடன் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் துவங்ககுவதற்கு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் மீண்டும் ஆக்ஸிஜன் பிளாண்டை புதுப்பித்து 15 தினங்களுக்குள் செயல்படுத்தபடும்.இதற்காக ஓய்வு பெற்ற BHEL முன்னாள் பொறியாளர்கள், தொழிலாளர்கள் எவ்வித சன்மானம் இன்றி தங்கள் உழைப்பை வழங்க தயாராக உள்ளனர்.புதுப்பிக்கப்பட உள்ள இந்த பிளான்ட் மூலம் நாளொன்றுக்கு 140 கியுபிக் மீட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய முடியும். அதாவது நாள்தோறும் 350 எண்ணிக்கையிலான மருத்துவ ஆக்ஸிஜன் சிலிண்டர்களை பெற முடியும் என்று தெரிவித்தார்.BHEL நிறுவனத்தில் கடந்த 2013ம் ஆண்டில் உற்பத்தி செயல்பாடுகள் நிறுத்தப்பட்ட நிலையில்அதில் ஒரு உற்பத்தி மையம் தான் தற்போது புதுப்பிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave A Reply

Your email address will not be published.