தான் ஒரு ஜனாதிபதி எனக்கூறி கடைகளை அடித்து நொருக்கிய முன்னாள் ராணுவ வீரர்

0 381
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை சேதுரெத்தினபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். மனநலம் பாதிக்கப்பட்ட இவர் தன்னை இந்தியாவின் ஜனாதிபதி என்று கூறிக்கொண்டு அலைவதோடு வீட்டிலும் அப்படியே சுவற்றில் எழுதியும் வைத்திருப்பார். இதேபோல் இந்திய அரசின் முத்திரையை போலியாக அச்சிட்டு அதில் அரசின் உத்தரவுகள் எனவும் அச்சிட்டு துறைகளுக்கு அனுப்புவார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக சாலையில் நிர்வாணமாக சுற்றி திரிந்ததுடன் ஆக்ரோசமாகவும் இருந்து வந்தார். இது மட்டுமின்றி திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நிர்வாண நிலையில் நடந்து சென்றது அனைவரையும் முகம் சூழிக்க வைத்தது. இதேபோல் நேற்று இரவு சில கடைகளின் மின் விளக்குகளை அடித்து நொறுக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டத்துடன் மக்களும் ஓட்டம் பிடித்தனர்.

மேலும் அதிக அளவிலானோர் சேதுரெத்தினபுரம் பகுதியில் திரண்டு நாகராஜனை அழைத்து சென்று மனநல மருத்துவமனையில் சேர்த்திட போலீசாரிடம் வலியுறுத்தினர். இதையடுத்து மணப்பாறை இன்ஸ்பெக்டர் கருணாகரன் சம்பவ இடத்திற்கு சென்று நாகராஜனை பிடித்து திருச்சியில் உள்ள மனநல மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அதன் பின்னரே மக்கள் நிம்மதி பெரு மூச்சு விட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave A Reply

Your email address will not be published.