மனநலம் பாதித்த பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த போலீஸ் ஏட்டு

0 263
Stalin trichy visit

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கொல்லாங்குளம் பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அவரது வீட்டு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ் ஏட்டு கருணாநிதி என்பவர் அந்த பெண்ணை அழைத்து எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள ரெயில்வே மேம்பாலம் கீழே ரெயில்வே கிராசிங்கில் உள்ள பாழடைந்த அறைக்கு அழைத்துச் சென்று செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளார். இதனை அந்த வழியே சென்ற ஒருவர் பார்த்து சத்தமிட்டுள்ளார். இதனை கவனித்த போலீஸ் ஏட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.

தற்போது போலீஸ் ஏட்டு கருணாநிதி தற்சமயம் திருச்சி மாநகர ஆயுதப்படை பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி, மகள் மற்றும் மகன் உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதை தொடர்ந்து திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீஸ் ஏட்டு கருணாநிதியை கைது செய்தனர். பின்னர் அவர் திருச்சி மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு துறையூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.