பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடியில் மோதல்

0 292
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் வையம்பட்டியை அடுத்த பொன்னம்பலம்பட்டியில் சுங்கச்சாவடி உள்ளது. இந்த நிலையில் திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் ஒன்று பாஸ் டேக் வழியாக செல்ல முயன்றபோது, அதை மற்றொரு வழிதடத்தில் செல்லுமாறு சுங்க சாவடி ஊழியர்கள் சொன்னதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சுங்க சாவடி ஊழியருக்கும், சம்மந்தப்பட்ட நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.

மேலும் இருதரப்பினரும் ஆட்களை திராட்டியதால் மேலும் பரபரப்பானது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வையம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.